May 2026

News, Uncategorized

ஹட்டன் – பொகவந்தலாவ வீதியில் விபத்து

பாடசாலை பேருந்தும் பாரவூர்தியும் மோதி மாணவன் காயம் ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், எதிர்த்திசையில் பயணித்த பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை சுமார் 7.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், பிரதேசத்தில் நிலவும் சீரற்ற […]

Local News, News

பொதுநலவாய பொதுச் செயலாளருடன் பிரதமர் சந்திப்பு

லண்டனில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் காலநிலை விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் Shirley Ayorkor Botchweyயை லண்டனிலுள்ள மார்ல்பரோ மாளிகையில் நேற்று (21) சந்தித்து கலந்துரையாடினார். லண்டனில் இன்று ஆரம்பமான ‘கற்றலுக்கான பொதுநலவாய’ அமைப்பின் 43ஆவது ஆளுநர் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பொதுநலவாயக் கட்டமைப்பிற்குள் இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் பகிரப்பட்ட முன்னுரிமைகள் குறித்து விரிவாகப்

Local News, News

பங்குச் சந்தையில் மீண்டும் புத்துயிர்

முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்த கொழும்பு பங்கு சந்தை வளர்ச்சி கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 95.87 புள்ளிகளால் உயர்ந்து 21,929.64 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில், கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த வர்த்தகப் புரள்வு 2.1 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் உருவாக்கியுள்ளது.

Astrology, News

இன்றைய ராசி பலன் 21 மே 2026

இன்று மே 21, 2026 புதன் கிழமை, பராபவ வருடம், வைகாசி மாதம் 07ம் தேதி, கடக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று மரண யோகம் உள்ள தினம். இன்று குரு அருள் கிடைக்கக்கூடிய நாள். இன்று விருச்சிக, தனுசு ராசியில் உள்ள கேட்டை, மூலம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று 21 மே 2026 வைகாசி மாதம் 07ம் தேதி புதன்கிழமை, கடக ராசியில் புனர்பூசம், பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று

News, World News

சீனாவில் கனமழை மற்றும் வெள்ளப் பேரழிவு: 21 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்

சீனா நாட்டின் பல மாகாணங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கால் இதுவரை குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீற்றர் பரப்பளவிலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குவாங்சி பகுதியில் பண்ணைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதில், அதிலிருந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், குயிஜவ் மாகாணத்தில்

News, Uncategorized

யாழ்ப்பாணத்தில் வரதட்சணை கொடுமை: 19 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில் வரதட்சணை தொடர்பான அழுத்தங்களால் மனஉளைச்சலுக்கு ஆளான 19 வயது இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த குறித்த யுவதி, இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நபரையே நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவரது கணவரின் தாயார் இந்த திருமணத்தை ஏற்காத நிலையில் இருந்ததாகவும், பின்னர் 25 பவுண் தங்க நகை மற்றும் வீடு வரதட்சணையாக கோரி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும்

Local News, News

காலிமுகத்திடல் போராட்ட வெறுப்பை மலையகத்துக்கு திருப்பினர் – நாடாளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு

நாட்டில் இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது உருவான அரசியல் அதிருப்தியும் வெறுப்பும், மலையகத்தில் தமக்கும் தமது குடும்ப அரசியல் பின்னணிக்கும் எதிராக திசைதிருப்பப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கத்திலிருந்து மக்கள் வாக்கு பெற்று இந்த சபைக்கு வந்த ஒரே நபர் தானே என குறிப்பிட்டதுடன், மலையக மக்களுக்காக தொண்டமான் குடும்பம் செய்த சேவைகளையும் நினைவுகூர்ந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காலிமுகத்திடல்

Local News, News

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மேலும் சரிவு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இன்று (21) வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 354.03 ரூபாவாக உயர்ந்துள்ளது. மேலும், டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 342.63 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்து வருவதை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

News, Uncategorized

தேசிய தரவுப் பரிமாற்ற மையம் அமைக்க நடவடிக்கை

தேசிய தரவுப் பரிமாற்ற மையம் ஒன்றை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. பொதுத்துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரச நிறுவனங்களுக்கு இடையில் தரவுகளை பகிர்ந்துகொள்ளும் வசதியை உருவாக்கும் நோக்கில் இந்த மையம் அமைக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இந்த புதிய மையம் மூலம் அரச நிறுவனங்கள் இடையே தடையின்றி தரவுப் பரிமாற்றம் செய்ய முடியும் எனவும், இதனால் பொதுமக்கள் சேவைகளை

News, World News

ஜப்பானில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ஜப்பானின் தெற்குப் பகுதியில் இன்று (20) 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 11:46 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியதுடன், இது சுமார் 50 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தெற்கு அமமி பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக ஜப்பான் பிரதமர் அலுவலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Scroll to Top