May 2026

News, World News

ஆப்கானிஸ்தானில் கோர விபத்து: அகதிகள் சென்ற லொறி கவிழ்ந்து 18 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பாரிய சாலை விபத்தில் 10 குழந்தைகள் மற்றும் 5 பெண்கள் உட்பட மொத்தம் 18 ஆப்கானிய அகதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜலாலாபாத் நகரத்தையும் தலைநகர் காபூலையும் இணைக்கும் லக்மேன் மாகாண நெடுஞ்சாலையில் நேற்று (30) இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானில் தங்கியிருந்த ஆப்கானிய அகதிகள் தாயகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த லொறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்ததாக லக்மேன் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மாலிக் […]

Local News, News

இன்று வானில் அரிய ‘நீல நிலவு’ தோற்றம்; பொதுமக்களுக்கு பார்வையிட வாய்ப்பு

பல ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றவுள்ள ‘நீல நிலவு’ (Blue Moon) எனப்படும் அரிய வானியல் நிகழ்வை இன்று (31) இரவு பொதுமக்கள் பார்வையிட முடியும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நிகழ்வு பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது சில சந்தர்ப்பங்களில் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய அரிய வானியல் சம்பவமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நீல நிலவு’ என்ற பெயர் இருந்தாலும், சந்திரன்

Local News, News

செப்டம்பருடன் தற்காலிக நிவாரணங்கள் நிறுத்தம்; IMF-க்கு ஜனாதிபதி அநுர உறுதி

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கும் நிதி 100 பில்லியன் ரூபாவிற்குள் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துக்கு (IMF) உறுதியளித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், தற்போது வழங்கப்படும் அனைத்து தற்காலிக நிவாரணங்களும் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் படிப்படியாக நிறுத்தப்படும் என்றும், நாட்டின் நிதி

Local News, News

இன்று நள்ளிரவு முதல் அமுல்: அனைத்து முக்கிய எரிபொருட்களின் விலையும் உயர்வு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை லிட்டருக்கு 407 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், லங்கா சுப்பர் டீசலின் விலை 20 ரூபாயால் உயர்த்தப்பட்டு, லிட்டரொன்றின் புதிய விலை 478 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அது லிட்டருக்கு 434 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.

Astrology, News

இன்றைய ராசி பலன் 30 மே 2026

இன்று மே 30, 2026 சனிக் கிழமை, பராபவ வருடம், வைகாசி மாதம் 16ம் தேதி, விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சனி அருளும், புதன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் பத்ர யோகம் கிடைக்கக்கூடிய நாள். இன்று மீனம், மேஷ ராசியில் உள்ள ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று மே 30, 2026 வைகாசி மாதம் 16ம் தேதி சனிக் கிழமை, விருச்சிக ராசியில்

Local News, News

நீதிமன்ற அனுமதியுடன் கைதி ஜெயக்குமாரின் உடல் அரச செலவில் அடக்கம்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றுள்ளன. யாழ்ப்பாணம் கோம்பையன் இந்து மயானத்தில் அவரது உடல் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி எஸ். பிரணவன் உறுதிப்படுத்தியுள்ளார். வித்யா படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் உறுதி செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து தீர்ப்பை அறிவிப்பதற்காக மரண தண்டனை கைதிகள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து

Cinema, News

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்

தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மரணமடைந்த போது அவருக்கு 85 வயதாகியிருந்தது. மோகினி மணியின் மறைவுச் செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அஜித்குமார் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவித்து

Local News, News

காணாமல் போன 4 கடற்றொழிலாளர்களை தேடும் பணிகள் தீவிரம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்று காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விடயத்தை கடற்படை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 27 ஆம் திகதி இரவு சுமார் 11 மணியளவில் இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற குறித்த கடற்றொழிலாளர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களை கண்டறியும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடற்றொழிலாளர்கள் பயணித்திருக்கக்கூடிய திசைகள் தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தேடுதல்

Cinema, News

அஜித் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் விஜய்

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுச் செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மோகினி மணியின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி

Local News, News

ஒழுக்காற்று பிரச்சினைகளால் 500-க்கும் மேற்பட்ட சாரதிகள் பணியிடை நீக்கம்

ஒழுக்காற்று விதிமீறல்கள் காரணமாக சுமார் 400 முதல் 500 வரையான சாரதிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பான விவகாரம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சில சாரதிகள் வேறு வழிகளில் வருமானம்

Scroll to Top