Local News

Local News, News

பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த அரசாங்கம் உறுதி – பிரதமர்

பொதுப் போக்குவரத்தை பொதுமக்களுக்கு வசதியானதும் பாதுகாப்பானதுமான பயணத் தெரிவாக மாற்றுவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். “கனவு இலக்கு” (Dream Destination) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தை நேற்று (10) திறந்து வைத்து உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பொது இடங்கள் மற்றும் பயண வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதில் மக்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். பொதுப் போக்குவரத்து துறைக்கான […]

Local News, News

வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு: இரு சிறார்கள் உயிரிழப்பு, தந்தை படுகாயம்

தெஹிவளை, கவுடான பகுதியில் உள்ள சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறார்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் இடம்பெற்ற வேளையில், இனந்தெரியாத நபர்கள் குறித்த வீட்டின் மீது கைக்குண்டொன்றை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Local News, News

உலக சாதனைப் பதிவுக்கு பரிசீலனை: திருகோணமலையில் அகற்றப்பட்ட பாரிய சிறுநீரகக் கல்

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட 3.1 கிலோகிராம் எடையுடைய பாரிய சிறுநீரகக் கல், உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கற்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 52 வயதுடைய ஆண் ஒருவரின் சிறுநீரகப் பையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இந்தக் கல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. சுமார் 21 சென்டிமீற்றர் நீளமும் 3 கிலோ 100 கிராம் எடையும் கொண்ட இந்தக் கல், நோயாளி நீண்டகாலமாக சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை

Local News, News

சட்டவிரோத பணப்பரிமாற்றம்: நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் விளக்கமறியலில்

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள பணப் பரிமாற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வர்த்தக வங்கிகளின் முகாமையாளர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், குறித்த பணப் பரிமாற்ற நிறுவனம் மூலம் பெருமளவிலான பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக நிதி குற்றப்

Local News, News

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவியேற்பு

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். வொஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் அவரது பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் அனுபவம் எரிக் மேயர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட சிரேஷ்ட

Local News, News

நாட்டில் மின்வெட்டு ஏற்படாது – வலுசக்தி அமைச்சர் அறிவிப்பு

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் புதிய நிலக்கரி தொகைகள் நாட்டை வந்தடையவுள்ளதால், இந்த ஆண்டு நாட்டில் மின்வெட்டு ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்திற்குத் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான விலைமனு கோரல் நடவடிக்கைகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பின்பற்றப்பட்ட நடைமுறையில், நிலக்கரியின் தரம் தொடர்பான பரிசோதனை அறிக்கைகள் ஏற்றுமதி துறைமுகங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஊடாக பெறப்பட்டதாகவும், இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Local News, News

வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு: VAT மற்றும் தடுத்து வைக்கப்படும் வரிக்கான காலக்கெடுக்கள்

2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கான பெறுமதி சேர் வரி (VAT) தொகையை ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த வரியை உரிய காலத்துக்குள் செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. காசோலை, வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு ஆணை மூலம் செலுத்தப்படும் வரித் தொகை, உரிய காலக்கெடுவுக்குப் பின்னர் திணைக்களத்துக்கு கிடைத்தால், அது தாமதமான செலுத்துகையாகக் கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Local News, News

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனை

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை உள்ளடக்கிய இந்த சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த திருத்தத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார,

Local News, News

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை மாஅதிபர் தொடர்பில் அவர் வெளியிட்டிருந்த கருத்துகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், வாக்குமூலம் வழங்குவதற்காக சாகர காரியவசம் இன்று மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திற்கு (CCIB) வருகை தந்துள்ளார். இதன்போது, அவரை மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மாஅதிபர் தொடர்பில் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துகள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Local News, News

பேராதனை மருத்துவமனை ஒப்பந்தம்: கையூட்டு வழக்கில் இருவர் கைது

ரூ.20 இலட்சம் கையூட்டல் பணத்தைக் கோரி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது. விசாரணைகளின்படி, பேராதனைப் போதனா மருத்துவமனைக்கு 2027 ஆம் ஆண்டுக்கான உணவுப் பொருட்கள் விநியோக ஒப்பந்தம் தொடர்பாக, முறைப்பாட்டாளரின் தந்தை மற்றும் மாமனாரின் பெயர்களில் விலைமனு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படாமல் இருப்பதற்கும், அதன் மூலம் போட்டித்தன்மையைத் தவிர்ப்பதற்கும் முதலாவது சந்தேகநபர் ஆரம்பத்தில் ரூ.30 இலட்சம் கையூட்டல் கோரியுள்ளார். பின்னர் அந்தத் தொகை ரூ.25

Scroll to Top