
புதிய விதியின் கீழ் களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் நெய்மர்!
பிரேசில் சீரி ஏ கால்பந்து தொடரில் கோல் காப்பாளர்கள் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்கும் வகையில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதியின் கீழ், ஒரு நிமிடத்திற்கு களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் என்ற பெயரை சாண்டோஸ் அணியின் தலைவர் நெய்மர் பெற்றுள்ளார். புதிய விதியின்படி, ஆட்டத்தின்போது கோல் காப்பாளர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டால், ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் போது 1 நிமிடத்துக்கு ஒரு வெளிக்கள வீரரை களத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதற்காக […]








