
இலங்கைக்கு 9.5 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 950,000-ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 ஜனவரி 1 முதல் மே 17 வரை மொத்தம் 951,742 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து மட்டும் 221,953 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா மற்றும் […]









