
ஜப்பானின் தெற்குப் பகுதியில் இன்று (20) 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 11:46 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியதுடன், இது சுமார் 50 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தெற்கு அமமி பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக ஜப்பான் பிரதமர் அலுவலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
