Cinema

Cinema, News

ரவி மோகனின் தெலுங்கு அறிமுகம் – ரசிகர்களை கவர்ந்த புதிய போஸ்டர்

நடிகர் ரவி மோகன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தற்போது ‘கராத்தே பாபு’, ‘ஜீனி’, ‘பென்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தை தயாரித்து, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரவி மோகன் நேற்று தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு, […]

Cinema, News

மகன் ஆத்விக்கின் கால்பந்து வெற்றியை நிழற்படங்களுடன் கொண்டாடிய ஷாலினி

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினரின் மகன் ஆத்விக் அஜித், பாடசாலை மட்டத்திலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். மகனின் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகை ஷாலினி அஜித், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆத்விக்குடன் எடுத்துக்கொண்ட நிழற்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள நிழற்படங்களில், வென்ற கிண்ணம் மற்றும் பதக்கத்துடன் ஆத்விக், தனது தாயார் ஷாலினியுடன் மகிழ்ச்சியாகக் காட்சியளிக்கிறார். இந்த நிழற்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அஜித்தின் ரசிகர்கள் மற்றும்

Cinema, News

விஜய்யின் ‘ஜனநாயகன்’ வசூல் சாதனை;4 நாட்களில் ரூ.217 கோடி

எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள அவரது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, கடந்த 23 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. முதலில் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளால் வெளியீடு தாமதமானது. பின்னர், திரைப்படம் முழுமையாக இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.217 கோடி வசூல்

Cinema, News

இயக்குநரிலிருந்து நடிகராக ஜேசன் சஞ்சய்? திரையுலகில் புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளதாக தகவல்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில், அடுத்த கட்டமாக நடிகராகவும் திரையுலகில் பயணிக்கத் தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தந்தை விஜய்யின் பாதையைப் பின்பற்றி, ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாகும் வாய்ப்பு குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஜேசன் சஞ்சய் நடிக்க ஏற்ற கதைகளைத் தேர்வு செய்யும் பணியில் லைகா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகமாகுவது தொடர்பாக

Cinema, News

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ‘பட்டாம்பூச்சி’ பாடல் வெளியீடு

‘கருப்பு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகும். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பட்டாம்பூச்சி’ பாடலும் அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், நாசர், சுதா, சுனில், பவானி ஸ்ரீ, காளி வெங்கட், ஜோர்ஜ் மரியான், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள

Cinema, News

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்; தமிழ் திரையுலகம் சோகத்தில்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரும், “இயக்குநர் இமயம்” எனப் போற்றப்பட்டவருமான பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக இன்று (10.06.2026) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று அதிகாலை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அவரது மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாரதிராஜாவின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 1977 ஆம்

Cinema, News

முதல் நாளிலேயே வசூல் சாதனை படைத்த ‘பெத்தி’

ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம், நேற்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. புஜ்ஜி பாபு சனா இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் பணியாற்றியுள்ளார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, போமன் இரானி மற்றும் திவ்யேந்து உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெளியீட்டின் முதல் நாளிலேயே உலகளவில்

Cinema, News

திரைப்படக் கசிவு விவகாரம் தீவிரம் – சைபர் கிரைம் நடவடிக்கை தொடர்கிறது

தமிழக முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் நடித்ததாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. எனினும், தணிக்கைக் குழுவின் சில தடைகள் காரணமாக வெளியீடு தாமதமான நிலையில், படம் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் முழுமையாகக் கசிந்தது பெரும்

Cinema, News

விஜய்யின் ‘பிகில்’, ‘வாரிசு’ வசூலை முந்திய சூர்யாவின் ‘கருப்பு’! பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை

கடந்த மே 15ஆம் தேதி வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம், தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் கருப்பு சாமியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வெளியான ஆரம்ப நாட்களில் கலவையான விமர்சனங்களை சந்தித்த போதிலும், ரசிகர்களிடையே ‘கருப்பு’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக உலகம்

Cinema, News

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்

தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மரணமடைந்த போது அவருக்கு 85 வயதாகியிருந்தது. மோகினி மணியின் மறைவுச் செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அஜித்குமார் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவித்து

Scroll to Top