
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இன்று (21) வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 354.03 ரூபாவாக உயர்ந்துள்ளது.
மேலும், டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 342.63 ரூபாவாக பதிவாகியுள்ளது.
டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்து வருவதை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
