
இலங்கையை வாட்டும் வறட்சி: ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழப்பு
எல் நினோ தாக்கத்தால் நிலவும் கடும் வறட்சி காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களில் 25,037 குடும்பங்களைச் சேர்ந்த 78,368 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி நாடாளுமன்றத்தில் நேற்று (10) தெரிவித்தார். மொனராகலை, பதுளை, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த வாழ்வாதாரப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. வறட்சியின் தாக்கத்தால் விவசாயம், பெருந்தோட்டம், கடற்றொழில், சுயதொழில், வணிகம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக […]









