ரவி மோகனின் தெலுங்கு அறிமுகம் – ரசிகர்களை கவர்ந்த புதிய போஸ்டர்

நடிகர் ரவி மோகன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தற்போது ‘கராத்தே பாபு’, ‘ஜீனி’, ‘பென்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே, தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தை தயாரித்து, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ரவி மோகன் நேற்று தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு, அவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் ‘வட்டி காசுலவாடா’ திரைப்படத்தின் படக்குழுவினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தேஜ் உப்பலபதி இயக்கத்தில் மஞ்சு மனோஜ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில், ரவி மோகன் கடவுள் வெங்கடாசலபதியாக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top