
முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்த கொழும்பு பங்கு சந்தை வளர்ச்சி
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 95.87 புள்ளிகளால் உயர்ந்து 21,929.64 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில், கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த வர்த்தகப் புரள்வு 2.1 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் உருவாக்கியுள்ளது.
