Search Results for: 3

Here are the search results for your search.

Local News, News

பேராதனை மருத்துவமனை ஒப்பந்தம்: கையூட்டு வழக்கில் இருவர் கைது

ரூ.20 இலட்சம் கையூட்டல் பணத்தைக் கோரி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது. விசாரணைகளின்படி, பேராதனைப் போதனா மருத்துவமனைக்கு 2027 ஆம் ஆண்டுக்கான உணவுப் பொருட்கள் விநியோக ஒப்பந்தம் தொடர்பாக, முறைப்பாட்டாளரின் தந்தை மற்றும் மாமனாரின் பெயர்களில் விலைமனு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படாமல் இருப்பதற்கும், அதன் மூலம் போட்டித்தன்மையைத் தவிர்ப்பதற்கும் முதலாவது சந்தேகநபர் ஆரம்பத்தில் ரூ.30 இலட்சம் கையூட்டல் கோரியுள்ளார். பின்னர் அந்தத் தொகை ரூ.25 […]

Local News, News

சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வில் ரூ.7 கோடி மதிப்புள்ள உபகரணங்கள் பறிமுதல்

ஹொரணை, கொபவகவத்தை பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான இரத்தினக் கல் அகழ்வு நடவடிக்கையை வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவினர் சுற்றிவளைத்து முறியடித்துள்ளனர். நீண்டகாலமாக இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, இரத்தினக் கல் வர்த்தகர்கள் மூவர் உட்பட 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அகழ்வு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட 11 படகுகள், 5 மோட்டார்கள் மற்றும் பல்வேறு இயந்திரங்கள்,

News, Uncategorized

வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்; 5 மாவட்டங்களுக்கு அவசர அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய பகுதிகளில் வெப்பச் சுட்டெண் (Heat Index) “எச்சரிக்கை” மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறிப்பாக பிற்பகல் நேரங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, அதிக வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

News, Uncategorized

“பேருந்துகளை அதிகரிப்பதால் மட்டும் அரச போக்குவரத்து பிரச்சினைகள் தீராது” என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்கு (இ.போ.ச.) 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தனியார் பேருந்துத் துறையை மேலும் பாதிக்கும் என்றும், முறையான ஆய்வுகள் இன்றி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது “தேசியக் குற்றம்” போன்றது என்றும் அந்தச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இ.போ.ச.க்கு புதிய பேருந்துகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு

Cinema, News

விஜய்யின் ‘ஜனநாயகன்’ வசூல் சாதனை;4 நாட்களில் ரூ.217 கோடி

எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள அவரது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, கடந்த 23 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. முதலில் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளால் வெளியீடு தாமதமானது. பின்னர், திரைப்படம் முழுமையாக இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.217 கோடி வசூல்

News, World News

அமெரிக்கா – ஈரான் பதற்றம் தணிந்ததால் மசகு எண்ணெய் விலை சரிவு

அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரத் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தியதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, கடந்த வியாழக்கிழமை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியிருந்த பிரென்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை, தற்போது சுமார் 92 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. அதேவேளை, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெயின் விலையும் ஒரு பீப்பாய்க்கு 85 அமெரிக்க டொலர்களுக்கும் கீழ் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Local News, News

எரிபொருள் இறக்குமதி, மின் உற்பத்தி, உலகளாவிய விநியோகச் சிக்கல்கள் இலங்கைக்கு புதிய அழுத்தம்

மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம் மற்றும் உலகளாவிய விநியோகச் சிக்கல்களால் சர்வதேச எண்ணெய் சந்தை தொடர்ந்து நிலையற்ற நிலையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் அவசர சந்திப்பை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) கோரியுள்ளது. உலக எண்ணெய் சந்தையின் தற்போதைய நிலைமை இலங்கைக்கு கவலைக்குரியதாக இருப்பதாக CPC தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார். மோசமடைந்து வரும் நிலைமையைப் பொதுமக்களும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் எனவும்

Local News, News

நாளை முதல் தென்மேற்குப் பிராந்தியத்தில் மழை அதிகரிப்பு – சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் உயர்வு

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நாளை முதல் அடுத்த சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேவேளை, வெப்பச் சுட்டெண்ணின் தாக்கம் காரணமாக இன்று பகல் நேரத்தில் கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களில் மக்கள் அதிக வெப்பத்தை உணரக்கூடிய நிலை காணப்படும். சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மேலும், ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும் அம்பாறை,

News, World News

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் தாக்கத்தால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாதங்களாக நீடித்த சரிவுக்குப் பின்னர் மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. சமீபத்திய சந்தை நிலவரத்தின்படி, ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 100.60 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெயின்

Local News, News

இன்று நிறைவடையும் 2026 கல்வியாண்டின் இரண்டாம் தவணை; மூன்றாம் தவணை ஜூலை 27 முதல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இயங்கும் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கான 2026 கல்வியாண்டின் இரண்டாம் தவணை இன்று (24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இதனிடையே, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. அந்தப் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி

Scroll to Top