
எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள அவரது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, கடந்த 23 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.
முதலில் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளால் வெளியீடு தாமதமானது. பின்னர், திரைப்படம் முழுமையாக இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.217 கோடி வசூல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, இந்தியாவில் ரூ.145.98 கோடியும், வெளிநாடுகளில் ரூ.71.50 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த வசூல் விவரங்கள் குறித்து படக்குழு அல்லது தயாரிப்பு நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
