Search Results for: 3

Here are the search results for your search.

News, Uncategorized

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளதுடன், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக, 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் நீதித்துறை தொடர்பான ஏற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்வதுடன், நீதித்துறை அமைப்பு சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் […]

Local News, News

உலக சாதனைப் பதிவுக்கு பரிசீலனை: திருகோணமலையில் அகற்றப்பட்ட பாரிய சிறுநீரகக் கல்

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட 3.1 கிலோகிராம் எடையுடைய பாரிய சிறுநீரகக் கல், உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கற்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 52 வயதுடைய ஆண் ஒருவரின் சிறுநீரகப் பையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இந்தக் கல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. சுமார் 21 சென்டிமீற்றர் நீளமும் 3 கிலோ 100 கிராம் எடையும் கொண்ட இந்தக் கல், நோயாளி நீண்டகாலமாக சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை

Local News, News

சட்டவிரோத பணப்பரிமாற்றம்: நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் விளக்கமறியலில்

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள பணப் பரிமாற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வர்த்தக வங்கிகளின் முகாமையாளர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், குறித்த பணப் பரிமாற்ற நிறுவனம் மூலம் பெருமளவிலான பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக நிதி குற்றப்

News, World News

அவுஸ்திரேலியாவில் 7.5 இலட்சத்துக்கும் அதிகமான சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சந்தேகத்திற்குரிய 7.56 இலட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, இதுவரை சுமார் 4.62 இலட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகளையும், 2.94 இலட்சம் ஃபேஸ்புக் கணக்குகளையும் செயலிழக்கச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சிறார்களின் உடல் மற்றும் உளநலப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

News, World News

இந்தியாவில் கரையை நோக்கி அதிவேகமாக சென்ற பாரிய கப்பல்: அலறியடித்து ஓடிய மக்கள்

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த ‘MV Nawata Bhum’ என்ற பாரிய சரக்குக் கப்பல், இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றின் கரையில் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் நேற்று (13) காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவின் கிளாங் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட குறித்த கப்பல், கொல்கத்தாவில் அமைந்துள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. திடீர்

News, Uncategorized

மழை அதிகரித்தாலும் பின்னர் வறட்சி ஏற்படலாம் – எல் நினோ குறித்து எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை, ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இந்த நிலைமையின் தாக்கங்கள் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. எல் நினோ உருவாகும் வாய்ப்பு அதிகரிப்பு எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சக்திவாய்ந்த ‘எல் நினோ’ நிலைமை உருவாகுவதற்கான வாய்ப்பு 80 சதவீதத்துக்கும் அதிகமாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மழைவீழ்ச்சியில்

Local News, News

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவியேற்பு

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். வொஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் அவரது பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் அனுபவம் எரிக் மேயர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட சிரேஷ்ட

Local News, News

நாட்டில் மின்வெட்டு ஏற்படாது – வலுசக்தி அமைச்சர் அறிவிப்பு

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் புதிய நிலக்கரி தொகைகள் நாட்டை வந்தடையவுள்ளதால், இந்த ஆண்டு நாட்டில் மின்வெட்டு ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்திற்குத் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான விலைமனு கோரல் நடவடிக்கைகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பின்பற்றப்பட்ட நடைமுறையில், நிலக்கரியின் தரம் தொடர்பான பரிசோதனை அறிக்கைகள் ஏற்றுமதி துறைமுகங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஊடாக பெறப்பட்டதாகவும், இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Local News, News

வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு: VAT மற்றும் தடுத்து வைக்கப்படும் வரிக்கான காலக்கெடுக்கள்

2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கான பெறுமதி சேர் வரி (VAT) தொகையை ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த வரியை உரிய காலத்துக்குள் செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. காசோலை, வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு ஆணை மூலம் செலுத்தப்படும் வரித் தொகை, உரிய காலக்கெடுவுக்குப் பின்னர் திணைக்களத்துக்கு கிடைத்தால், அது தாமதமான செலுத்துகையாகக் கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News, Uncategorized

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

பரீட்சார்த்திகளின் வசதிக்காக சுமார் 1,700 ‘சிசு செரிய’ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார். இதேவேளை, உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை பாடசாலை பேருந்து சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. பரீட்சைக் காலப்பகுதியில் பாடசாலை பேருந்து சேவைகளை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுப்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பரீட்சைக் காலம் முழுவதும் தொடருந்துகள் வழக்கமான கால அட்டவணைக்கு

Scroll to Top