வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்; 5 மாவட்டங்களுக்கு அவசர அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய பகுதிகளில் வெப்பச் சுட்டெண் (Heat Index) “எச்சரிக்கை” மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறிப்பாக பிற்பகல் நேரங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, அதிக வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top