
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில், அடுத்த கட்டமாக நடிகராகவும் திரையுலகில் பயணிக்கத் தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தந்தை விஜய்யின் பாதையைப் பின்பற்றி, ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாகும் வாய்ப்பு குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஜேசன் சஞ்சய் நடிக்க ஏற்ற கதைகளைத் தேர்வு செய்யும் பணியில் லைகா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகமாகுவது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், அவர் விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாகலாம் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் அதிகரித்துள்ளது.
