கடந்த மே 15ஆம் தேதி வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம், தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் கருப்பு சாமியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வெளியான ஆரம்ப நாட்களில் கலவையான விமர்சனங்களை சந்தித்த போதிலும், ரசிகர்களிடையே ‘கருப்பு’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் இப்படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள பாக்ஸ் ஆபிஸ் தகவல்களின்படி, ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.312 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்களின் வசூல் சாதனைகளை ‘கருப்பு’ முறியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யாவின் திரைப்பயணத்தில் முக்கியமான வெற்றிப்படங்களில் ஒன்றாக ‘கருப்பு’ உருவெடுத்துள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் அதன் வசூல் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
