Cinema

Cinema, News

அஜித் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் விஜய்

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுச் செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மோகினி மணியின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி […]

Cinema, News

கிரிக்கெட்டில் அசத்திய அஜித் குமார் – இணையத்தில் வைரலாகும் வீடியோ

நடிகர் Ajith Kumar தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 90களில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துவரும் அஜித் குமார், நடிப்பு மட்டுமன்றி கார் ரேஸிங் உள்ளிட்ட பொழுதுபோக்கு துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவர் தனது நண்பர்களுடன் விளையாடிய கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பிங், பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் ஈடுபட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில், அவர் அதிரடியான ஷாட்டுகள் அடிப்பதுடன்,

Cinema, News

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம்: வெளியீடு குறித்து புதிய தகவல்

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிப்பு நடிகர் அஜித் குமார் தொடர்பான “கிளாடியேட்டர்ஸ்” என்ற ஆவணப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளதுடன், இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் செய்துள்ளார். அஜித்தின் வாழ்க்கை மற்றும் அவரது சாதனைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஆவணப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவணப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cinema, News

வசூலில் மிரட்டும் சூர்யாவின் “கருப்பு”

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பலமுறை வெளியீட்டு திகதி மாற்றப்பட்ட நிலையில், நேற்று உலகம் முழுவதும் திரைப்படம் வெளியிடப்பட்டது. வெளியான முதல் நாளிலேயே, உலகளவில் ரூ.20.66 கோடி வசூல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும், திரைப்படத்தின் கதை, சூர்யாவின் நடிப்பு மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருவதால், வரும் நாட்களிலும் வசூல் மேலும் அதிகரிக்கும்

Cinema, News

அரசியல் பரபரப்புக்கு நடுவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் பேச்சு!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ள விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, அதற்கு முன்பாகவே திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ வெளியாகும் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Cinema, News

தமிழக வெற்றிக் கழக வெற்றி: பிரபலங்களின் வரிசையில் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து

தமிழக வெற்றிக் கழகத்தின் சமீபத்திய வெற்றியை முன்னிட்டு, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கட்சித் தலைவர் விஜய் அவர்களை பாராட்டியுள்ளார். அந்த பதிவில், “அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றும் சிறந்த தலைவராக நீங்கள் உயர வளர என் மனமார்ந்த வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்

Cinema, News

தவெகவின் வெற்றிக்கு நயன்தாரா வாழ்த்து: “வரலாறு படைத்துவிட்டீர்கள்” என விஜய்க்கு பாராட்டு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நடிகை நயன்தாரா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், “வாழ்த்துகள் விஜய் சேர், நீங்கள் இன்று வரலாறு படைத்துவிட்டீர்கள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த வாழ்த்து பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Cinema, News

ரஜினி படத்தில் மகன் கதாபாத்திரம்: மலையாள நடிகருக்கு வாய்ப்பு?

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசன்  தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், படக்குழுவைச் சுற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் ரஜினிகாந்தின் மகனாக மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பசில் ஜோசப் நடிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பசில் ஜோசப், “நான் ஒரு பெரிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். தற்போது அதன் விவரங்களை வெளிப்படுத்த முடியாது” என்று கூறியிருந்ததும் இந்த

Cinema, News

விஜய் விவாகரத்து வழக்கில் புதிய மாற்றம்

தமிழக அரசியல் மற்றும் திரைப்பட உலகில் முக்கிய முகமாக விளங்கும் விஜய்  மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எழிலரசி திடீரென மாற்றப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்திற்கு பணியமர்த்தப்பட்டுள்ளார். இருவரும் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாமல், காணொளி வாயிலாக முன்னிலையாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இந்த மாற்றம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி

Cinema, News

டொக்சிக்” மீண்டும் தள்ளிவைப்பு: யஷ் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி!

யஷ் நடிப்பில், Geetu Mohandas இயக்கத்தில் உருவாகி வரும் Toxic திரைப்படம் மீண்டும் தாமதமாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல மொழிகளில் வெளியாகவிருந்த இந்த திரைப்படம் முதலில் மார்ச் 19ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அது ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் தற்போது, ஜூன் மாதத்திலும் படம் வெளியாகாது

Scroll to Top