July 2026

Local News, News

2027 வரவு–செலவுத் திட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு விசேட முன்னுரிமை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் விசேட நிதி மற்றும் முன்னுரிமை ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் தொடர்பாக இன்று (08) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது வெளியிடப்பட்டது. கலந்துரையாடலில், நாட்டின் பல பகுதிகளில் […]

News, World News

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (07) மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வைப் பதிவு செய்துள்ளது. சமீபத்திய சந்தைத் தரவுகளின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெயின் ஒரு பீப்பாயின் விலை 69.06 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, உலகளவில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் Brent ரக மசகு எண்ணெயின் ஒரு பீப்பாயின் விலை 72.55 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. உலகளாவிய எரிபொருள் தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வழங்கல் நிலைமை மற்றும் புவிசார் அரசியல்

News, Uncategorized

மட்டக்களப்பு நகரில் கடைத் தொகுதிகளில் தீ விபத்து; ஒரு கடை முற்றிலும் எரிந்து நாசம்

மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள கடைத் தொகுதிகளில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து, தீயணைப்பு படையினரும் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதிகாலை சுமார் 5.00 மணியளவில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பற்றியதையடுத்து, தீ அருகிலிருந்த மற்றொரு கடைக்கும் வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், காத்தான்குடி நகர சபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக தீயணைப்பு பிரிவினர்

Local News, News

மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்ட 5 தனியார் பேருந்துகள் பறிமுதல்

மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்ட ஐந்து தனியார் பேருந்துகளை இரத்தினபுரி தலைமையக காவல்துறையின் போக்குவரத்து பிரிவினர் இன்று (7) விசேட சோதனை நடவடிக்கையின்போது பறிமுதல் செய்துள்ளனர். இரத்தினபுரி நகரை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த பேருந்துகள் கண்டறியப்பட்டதாக, போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறைப் பரிசோதகர் ருவன் தர்மபால தெரிவித்தார். வாகன உற்பத்தியாளர்கள் பரிந்துரைத்த எரிபொருளுக்கு பதிலாக வேறு எரிபொருட்களை பயன்படுத்துவதோ அல்லது அவற்றைக் கலவையாக பயன்படுத்தி வாகனங்களை இயக்குவதோ சட்டவிரோதமான செயல் என அவர்

Local News, News

மொரட்டுவை பல்கலைக்கழகம் ஜூலை 21 வரை தற்காலிகமாக மூடப்பட்டது

மொரட்டுவை பல்கலைக்கழகம் டெங்கு நோய் பரவல் காரணமாக ஜூலை 21ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் டெங்கு தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து, மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பல்கலைக்கழக வளாகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Local News, News

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பாரிய வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு விடயதான அமைச்சராக முழுமையான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்கத்தின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்த துயரச் சம்பவம் மிகவும் கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொணர விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மோதல் எவ்வாறு

Local News, News

இன்றைய வானிலை: பல பகுதிகளில் மழை வாய்ப்பு – கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு எச்சரிக்கை

நிலப்பரப்பு: சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும். கடல் பிராந்தியங்கள்: சிலாபத்திலிருந்து கொழும்பு வழியாக காலி வரையிலான கடல் பகுதிகளில்

News, World News

அமெரிக்காவில் கடும் வெப்ப அலை: சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பாதிப்பு, மின்சாரத் தேவை உச்சம்

அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அந்நாட்டின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளன. வொஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறவிருந்த நூற்றுக்கணக்கான அணிவகுப்புகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கை நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சில நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஏற்பாட்டில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த Great American State Fair கண்காட்சியும், 38 பாகை செல்சியஸை எட்டிய வெப்பநிலை காரணமாக தற்காலிகமாக

News, World News

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் உயர்வு

சர்வதேச சந்தையில் இன்று (05) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்வடைந்துள்ளது. இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,175.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 62.39 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News, World News

சமூக வலைத்தளங்கள் மூலம் விமானப் பணியாளர்களை குறிவைக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள்

தாய்லாந்தில் இருந்து அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக, சர்வதேச கடத்தல் கும்பல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் விமானப் பணியாளர்களை குறிவைத்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானப் பணிப்பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கடத்தல் வலையமைப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயினின் சர்வதேச சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளில், வெறும் 8,800 தாய்

Scroll to Top