உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (07) மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வைப் பதிவு செய்துள்ளது.

சமீபத்திய சந்தைத் தரவுகளின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெயின் ஒரு பீப்பாயின் விலை 69.06 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

அதேவேளை, உலகளவில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் Brent ரக மசகு எண்ணெயின் ஒரு பீப்பாயின் விலை 72.55 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

உலகளாவிய எரிபொருள் தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வழங்கல் நிலைமை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால், மசகு எண்ணெய் விலையில் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top