July 2026

News, Uncategorized

டெங்கு பரவல் தீவிரம்: 24 மணித்தியாலங்களில் 1,217 புதிய நோயாளர்கள்; உயிரிழப்பு 32 ஆக உயர்வு

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தகவலின்படி, நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 1,217 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் பணிப்பாளர் கபில கன்னங்கர இன்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதன் மூலம், 2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, டெங்கு தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக […]

Local News, News

டோஹா – கொழும்பு விமான சேவைகள் முழுமையாக மீள ஆரம்பம்; கட்டார் எயார்வேஸ் தினமும் 5 சேவைகள்

கட்டார் எயார்வேஸ் நிறுவனம் டோஹா மற்றும் கொழும்பு இடையிலான தனது விமான சேவைகளை இன்று (01) முதல் முழுமையாக மீள ஆரம்பித்துள்ளது. இதன்படி, தினமும் 5 விமான சேவைகள் என்ற அடிப்படையில், வாரத்திற்கு மொத்தம் 35 விமான சேவைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இயக்கப்படவுள்ளன. இந்த சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, இலங்கையின் சுற்றுலாத்துறை, வர்த்தகப் பயணங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டோஹா ஊடாக மத்திய கிழக்கு,

Local News, News

இலங்கையில் 40% பேர் இன்னும் வரி வலையில் இல்லை; உள்நாட்டு இறைவரி திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையில் சுமார் 40 சதவீத மக்கள் இன்னும் வரி வலையில் இணைக்கப்படவில்லை என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு எவ்வளவு என்பது தொடர்பில் இதுவரை எந்த மதிப்பீடும் மேற்கொள்ளப்படவில்லை என்று திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்த தகவல்களை வெளியிட்டார். இதனிடையே, பொதுமக்களிடம் வரி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வரி

Local News, News

தங்க விலையில் திடீர் சரிவு; பவுணுக்கு ரூ.3,000 குறைவு

உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01) பவுணுக்கு 3,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (30) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 379,000 ரூபாயாகக் குறைந்துள்ளது. தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 379,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 348,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், 24 கரட்

News, World News

சர்வதேச சந்தையில் உயர்ந்த மசகு எண்ணெய் விலை; ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான நிலை

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தொடரும் நிச்சயமற்ற சூழலும், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலையும் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் உயர்வைப் பதிவு செய்துள்ளன. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 0.45 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 73.28 அமெரிக்க டொலராக விற்பனையாகிறது. அதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் விலை

Astrology, News

இன்றைய ராசி பலன்01 ஜூலை 2026 

இன்று ஜூலை 01, 2026 ஆனி மாதம் 17ம் தேதி புதன் கிழமை, மகர ராசியில் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று கடகத்தில் சுக்ரன் – குரு – புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை யோகமும், மகரத்தில் சந்திரன் இருப்பதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இன்று ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று 01 ஜூலை 2026 புதன் கிழமை, பராபவ வருடம், ஆனி மாதம்

Scroll to Top