July 2026

Local News, News

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கடுமையான வன்முறைச் சம்பவங்களையும், அதனைத் தொடர்ந்து பிற சிறைச்சாலைகளில் கைதிகள் மீது சிறைக்காவலர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பழிவாங்கும் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் ஆழ்ந்த கவலையுடனும் அதிர்ச்சியுடனும் கவனித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் ரவினா ஷாம்தாசனி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்டோரின் குடும்பத்தினர் […]

News, Sports News

மெதுவான ஓவர் வீதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அபராதம் மற்றும் புள்ளிகள் குறைப்பு

அன்டிகுவா மற்றும் பார்புடாவின் நோர்த் சவுண்டில் நடைபெற்ற இலங்கை–மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஓவர்களை பூர்த்தி செய்யத் தவறியதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தண்டனை விதித்துள்ளது. இதன்படி, மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களின் போட்டி ஊதியத்தில் 10 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரில் அந்த அணியின் மொத்தப் புள்ளிகளில் இருந்து 2 புள்ளிகள் கழிக்கப்பட்டுள்ளன. இந்தத் தண்டனையை ஐசிசியின் எலைட் பேனல்

News, World News

அமெரிக்கா–ஈரான் பதற்றம் எதிரொலி; உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கமாக உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் உயர்வைப் பதிவு செய்துள்ளன. அதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 78.50 அமெரிக்க டொலர் ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று (08) பதிவான விலையை விட 2.50 அமெரிக்க டொலர் அதிகமாகும். அதேவேளை, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 74.20 அமெரிக்க டொலர்

News, World News

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை மேலும் சரிவு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (09) மேலும் குறைந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,072.38 அமெரிக்க டொலர் ஆக பதிவாகியுள்ளது. அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 74.02 அமெரிக்க டொலர் ஆக காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றம், இலங்கையின் உள்நாட்டு தங்கச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய பொருளாதார

Local News, News

இன்று மேலும் குறைந்த தங்க விலை; புதிய விலை விவரங்கள் வெளியீடு

உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (09) மேலும் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (08) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. 376,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ. 2,000 குறைந்து ரூ. 374,000 ஆக பதிவாகியுள்ளது. தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. 374,000 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.

Local News, News

அமெரிக்க டொலரின் விற்பனை விலை உயர்வு; மத்திய வங்கி இன்றைய மாற்று விகிதத்தை வெளியிட்டது

இலங்கை மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை உயர்வடைந்துள்ளது. அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 340.86 ஆக பதிவாகியுள்ளது. நேற்று (08) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 339.73 ஆக இருந்த நிலையில், இன்று அதில் உயர்வு பதிவாகியுள்ளது. வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள், உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் உள்நாட்டு சந்தை நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின்

Local News, News

புதிய வாகனப் பதிவுகளுக்கு இலக்கத் தகடுகள் வழங்க முன்னுரிமை

சுமார் ஓராண்டு கால இடைநிறுத்தத்திற்குப் பின்னர், வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் மற்றும் விநியோகிக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 8, 2026 முதல், வெரஹெரவிலுள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்தில் இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் உத்தியோகபூர்வமாக மீளத் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் தற்போது இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் பகல்

News, Uncategorized

காற்றின் வேகம் அதிகரிக்கும்; பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை வேகமுடைய பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மத்திய, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம், அம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த காற்று வீசும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Local News, News

பழைய போகம்பரை சிறைச்சாலை மீண்டும் அதிகாரப்பூர்வ சிறைச்சாலையாக அறிவிப்பு

நீதியமைச்சரும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹர்ஷன நாணயக்கார, பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் அதிகாரப்பூர்வ சிறைச்சாலையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) 2ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, பழைய போகம்பரை சிறைச்சாலையின் அதிகார வரம்பு முழு இலங்கையையும் உள்ளடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை, அவற்றின் கொள்ளளவை

Local News, News

நாளை அதிக வெப்பம்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை நாளை (09) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய காலநிலைக் கணிப்பு மாதிரிகள், வளிமண்டல ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை தொடர்பான தரவுகளின் அடிப்படையில் இந்த வெப்பச் சுட்டெண் கணக்கிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிக வெப்பநிலையால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும்

Scroll to Top