
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கமாக உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் உயர்வைப் பதிவு செய்துள்ளன.
அதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 78.50 அமெரிக்க டொலர் ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று (08) பதிவான விலையை விட 2.50 அமெரிக்க டொலர் அதிகமாகும்.
அதேவேளை, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 74.20 அமெரிக்க டொலர் ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய நாளை விட 2 அமெரிக்க டொலர் அதிகரிப்பாகும்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தொடருமானால், உலகளாவிய எரிபொருள் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மேலும் உயரக்கூடும் என சர்வதேச சந்தை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த விலை உயர்வு பல நாடுகளின் எரிபொருள் இறக்குமதி செலவை அதிகரிப்பதுடன், உள்நாட்டு எரிபொருள் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
