
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (09) மேலும் குறைந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,072.38 அமெரிக்க டொலர் ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 74.02 அமெரிக்க டொலர் ஆக காணப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றம், இலங்கையின் உள்நாட்டு தங்கச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் சந்தை நகர்வுகள் ஆகியவை எதிர்வரும் நாட்களிலும் தங்கம், வெள்ளி விலைகளில் ஏற்ற, இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
