
நாட்டின் பல பகுதிகளில் இன்று மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை வேகமுடைய பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மத்திய, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம், அம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த காற்று வீசும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
