June 2026

Local News, News

ஹொரணை தீ விபத்து: பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஹொரணை – அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள ‘செனஹஸே கெதெல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம், கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் காயமடைந்த மேலும் ஐந்து பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் முதியோர் இல்லத்தில் 72 பேர் தங்கியிருந்ததாகவும், […]

News, Uncategorized

ஜூன் மாத எரிவாயு விலை குறித்து இன்று முடிவு

ஜூன் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று (05) அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்திர விலைச் சூத்திரத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஜூன் மாதத்திற்கான புதிய எரிவாயு விலை இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் லாஃப்ஸ் நிறுவனம் தனது சமையல் எரிவாயு விலையை உயர்த்தியிருந்த போதிலும், லிட்ரோ நிறுவனம் எந்தவித விலைத் திருத்தத்தையும் மேற்கொள்ளாமல் விலைகளை நிலையான நிலையில் பேணியிருந்தது

Local News, News

ஹொரணை தீ விபத்தைத் தொடர்ந்து முதியோர் இல்லங்களுக்கு கடும் கண்காணிப்பு

நாடு முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அவை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் 455 முதியோர் இல்லங்கள் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 10,000-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், பல முதியோர் இல்லங்கள் இதுவரை

Local News, News

இலங்கையில் இன்றும் தங்க விலை சரிவு; பவுணுக்கு ரூ.1,000 குறைவு

இலங்கையில் தங்க விலை இன்று (05) மேலும் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 1,000 ரூபாவால் குறைந்து 386,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 355,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 48,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 44,400 ரூபாவாகவும்

Local News, News

மத்திய கிழக்கு பதற்றம் தணியும் எதிர்பார்ப்பில் எண்ணெய் விலைகள் அதிகரிப்பு

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் உயர்வு பதிவாகியுள்ளது. அதன்படி, WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 0.06 அமெரிக்க டொலர்கள் (0.06%) அதிகரித்து 93.10 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. மேலும், பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 0.35 அமெரிக்க டொலர்கள் (0.37%) உயர்ந்து 95.38 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலையும் 0.014 அமெரிக்க டொலர்கள் (0.42%) அதிகரித்து 3.350 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

Astrology, News

இன்றைய ராசி பலன் 4 ஜூன் 2026

இன்று 04 ஜூன் 2026 வியாழக் கிழமை, பராபவ வருடம், வைகாசி மாதம் 21ம் தேதி தனுசு, மகர ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். குருவின் அருள் அதிகமாக கிடைக்கக்கூடிய நாள். இன்று ரிஷபம், மிதுனராசியில் உள்ள ரோகிணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சுபமுகூர்த்த தினம் இன்று ஜூன் 04, 2026 வைகாசி மாதம் 21ம் தேதி வியாழக் கிழமை, தனுசு, மகர ராசியில் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில்

News, Sports News

உலக தரவரிசையில் வரலாற்றுச் சாதனை – முதல் 5 இடத்துக்குள் நுழைந்த இலங்கை வீரர் ருமேஷ் தரங்க

இலங்கையின் இளம் ஈட்டி எறிதல் நட்சத்திரமான ருமேஷ் தரங்க, உலக ஆண்கள் ஈட்டி எறிதல் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பல சர்வதேச போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான திறமையின் அடிப்படையில், அவர் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி 1,287 சராசரி செயல்திறன் புள்ளிகளுடன் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மொரோக்கோவில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘ரபாத் டைமண்ட் லீக்’ போட்டியில், உலகத் தரம் வாய்ந்த வீரர்களுடன் போட்டியிட்ட ருமேஷ் தரங்க 85.97

Local News, News

நாவலப்பிட்டியில் அதிர்ச்சி விபத்து – மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலி

நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மூன்று சக்கர வண்டி மீது பிரதான வீதிக்கு அருகிலிருந்த பெரிய யூக்கலிப்டஸ் மரம் திடீரென முறிந்து விழுந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (04) காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது மூன்று சக்கர வண்டியின்

News, World News

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்: நாசாவின் ‘நான்சி கிரேஸ் ரோமன்’ தொலைநோக்கி

அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (NASA) உருவாக்கியுள்ள புதிய அதிநவீன தொலைநோக்கி விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால்வெளியின் இதுவரை ஆராயப்படாத பகுதிகளில் புதிய கிரகங்களை கண்டறியும் நோக்கில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘நான்சி கிரேஸ் ரோமன்’ (Nancy Grace Roman) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி, வரும் செப்டம்பர் மாதத்தில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய இலக்காக, பால்வெளியில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத பகுதிகளில் சுமார் 1,00,000 புதிய கிரகங்களை

Cinema, News

திரைப்படக் கசிவு விவகாரம் தீவிரம் – சைபர் கிரைம் நடவடிக்கை தொடர்கிறது

தமிழக முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் நடித்ததாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. எனினும், தணிக்கைக் குழுவின் சில தடைகள் காரணமாக வெளியீடு தாமதமான நிலையில், படம் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் முழுமையாகக் கசிந்தது பெரும்

Scroll to Top