
இலங்கையில் தங்க விலை இன்று (05) மேலும் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 1,000 ரூபாவால் குறைந்து 386,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 355,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 48,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 44,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் காரணமாக தங்க சந்தை நிலவரம் குறித்து நுகர்வோரும் முதலீட்டாளர்களும் அவதானம் செலுத்தி வருகின்றனர்.
