உலக தரவரிசையில் வரலாற்றுச் சாதனை – முதல் 5 இடத்துக்குள் நுழைந்த இலங்கை வீரர் ருமேஷ் தரங்க

இலங்கையின் இளம் ஈட்டி எறிதல் நட்சத்திரமான ருமேஷ் தரங்க, உலக ஆண்கள் ஈட்டி எறிதல் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பல சர்வதேச போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான திறமையின் அடிப்படையில், அவர் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி 1,287 சராசரி செயல்திறன் புள்ளிகளுடன் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

மொரோக்கோவில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘ரபாத் டைமண்ட் லீக்’ போட்டியில், உலகத் தரம் வாய்ந்த வீரர்களுடன் போட்டியிட்ட ருமேஷ் தரங்க 85.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தச் சிறப்பான செயல்திறமே அவரது உலக தரவரிசை முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தற்போதைய தரவரிசையில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முதலிடத்தில் நீடிக்கின்றார்.

உலகின் முன்னணி 5 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

ஜூலியன் வெபர் (ஜெர்மனி) – 1ஆம் இடம்
ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரெனடா) – 2ஆம் இடம்
கெஷோர்ன் வால்காட் (டிரினிடாட் மற்றும் டொபாகோ) – 3ஆம் இடம்
நீரஜ் சோப்ரா (இந்தியா) – 4ஆம் இடம்
ருமேஷ் தரங்க (இலங்கை) – 5ஆம் இடம்

இலங்கை விளையாட்டுத் துறைக்கு இது ஒரு முக்கியமான சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top