June 2026

News, World News

பிலிப்பைன்ஸ் அருகே சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை வெளியீடு

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மிண்டானாவோ தீவுக்கு அருகில் இன்று (8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் ஆழிப்பேரலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (GFZ) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. ஆரம்பத்தில் 8.2 ரிக்டர் அளவாக மதிப்பிடப்பட்ட இந்த நிலநடுக்கத்தின் வலிமை பின்னர் 7.8 ரிக்டர் அளவாக திருத்தப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவின் புவியியல் […]

Local News, News

பாடகர் கைது மனவேதனைக்குரியது; அரசியல் வெற்றியாக பார்க்கக் கூடாது – இளங்குமரன்

பிரபல பாடகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இளங்குமரன், இந்த நிகழ்வு சில அரசியல்வாதிகளுக்கு அரசியல் ரீதியாக சாதகமாக இருக்கலாம் என்றாலும், கலை மற்றும் கலாசாரத் துறையினருக்கு அது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கலைஞர் சட்ட சிக்கலில் சிக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமல்ல என்றும், அதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், உண்மைகள் முழுமையாக வெளிவரும் வரை பொறுப்புடன்

News, Sports News

15 வயதில் இந்திய அணிக்கு தேர்வு: சச்சின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி

15 வயதிலேயே இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணிக்குள் நுழைந்த மிக இளைய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை முறியடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் வாழ்த்துத் தெரிவிக்க வந்த பொதுமக்கள் திரண்டுள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து இந்திய ஊடகத்துக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில், வைபவ்வின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி

News, World News

மத்திய கிழக்கு பதற்றம் தொடர்ந்தும் நீடிப்பு: எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் சரிவு

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் மற்றும் பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்று வீழ்ச்சியடைந்துள்ளன. சர்வதேச சந்தைத் தரவுகளின்படி, அமெரிக்காவின் அடிப்படை அளவுகோலான WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 90.54 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, உலகளவில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 93.09 அமெரிக்க டொலராக

News, Sports News

2வது ஒருநாள் போட்டி: நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இதன்படி, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொடரை சமநிலைப்படுத்தும் நோக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும், முன்னிலையை

Astrology, News

இன்றைய ராசி பலன் 6 ஜூன் 2026

இன்று ஜூன் 06, 2026 சனிக் கிழமை, பராபவ வருடம், வைகாசி மாதம் 23ம் தேதி மகரம், கும்ப ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். சனீஸ்வரனின் அருள் அதிகமாக கிடைக்கக்கூடிய நாள். இன்று மிதுன, கடகம் ராசியில் உள்ள புனர்பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஜூன் 06, 2026 வைகாசி மாதம் 23ம் தேதி சனிக் கிழமை, மகரம், கும்ப ராசியில் அவிட்டம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார்.

Cinema, News

முதல் நாளிலேயே வசூல் சாதனை படைத்த ‘பெத்தி’

ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம், நேற்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. புஜ்ஜி பாபு சனா இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் பணியாற்றியுள்ளார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, போமன் இரானி மற்றும் திவ்யேந்து உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெளியீட்டின் முதல் நாளிலேயே உலகளவில்

Local News, News

பல கடற்பகுதிகளில் கடும் காற்று; கடல் பயணங்களுக்கு எச்சரிக்கை

இலங்கையைச் சுற்றியுள்ள பல கடல் பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், பலத்த காற்றும் வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, மன்னார் ஊடாக காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முல்லைத்தீவு ஊடாக திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான கடற்பகுதிகளும், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக கற்பிட்டியிலிருந்து

Local News, News

தேனீக்கள் அழிவின் விளிம்பில்; இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு எச்சரிக்கை மணி

இலங்கையில் தேனீக்கள் உள்ளிட்ட மகரந்தச்சேர்க்கை உயிரினங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவது, நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் விவசாயத் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். விவசாயத் திணைக்களத்தின் தகவல்களின்படி, தேனீக்களின் மகரந்தச்சேர்க்கை மூலம் பல பயிர்களின் விளைச்சலை 20 முதல் 70 சதவீதம் வரை அதிகரிக்க முடியும். எனினும், நவீன விவசாய முறைகள், வாழ்விட அழிப்பு மற்றும் அதிகளவிலான இரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்பாடு காரணமாக தேனீக்களின் எண்ணிக்கை கவலைக்கிடமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. பெரிய அளவிலான

News, Uncategorized

நாளை நாட்டின் பல பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று

நாட்டின் பல பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள், மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மத்திய, சபரகமுவ, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல்

Scroll to Top