மத்திய கிழக்கு பதற்றம் தொடர்ந்தும் நீடிப்பு: எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் சரிவு

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் மற்றும் பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்று வீழ்ச்சியடைந்துள்ளன.

சர்வதேச சந்தைத் தரவுகளின்படி, அமெரிக்காவின் அடிப்படை அளவுகோலான WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 90.54 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேவேளை, உலகளவில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 93.09 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

இதேநேரம், இயற்கை எரிவாயு சந்தையிலும் விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.229 அமெரிக்க டொலராக குறைந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் தொடரும் அரசியல் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் உலக எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் விலை மாற்றங்கள் எவ்வாறு அமையும் என்பது குறித்து முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அவதானம் செலுத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top