
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தொடரை சமநிலைப்படுத்தும் நோக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும், முன்னிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை அணியும் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன.
