June 2026

Local News, News

VAT வரிச்சுமையால் வீழ்ச்சியடைந்த தங்க நகைச் சந்தை; வர்த்தகர்கள் அவசர தீர்வு கோரிக்கை

அதிகப்படியான வாட் (VAT) வரி விதிப்பு காரணமாக இலங்கையின் உள்நாட்டு தங்க ஆபரணச் சந்தை கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளதாக கொழும்பு புறக்கோட்டை தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வர்த்தகர்களின் கூற்றுப்படி, அண்மைக் காலங்களில் தங்க நகை விற்பனை சுமார் 75 சதவீதம் வரை குறைந்துள்ளதுடன், நாட்டின் பாரம்பரிய கைத்தொழில்களில் ஒன்றான தங்க ஆபரண உற்பத்தித் துறை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. தற்போதைய வரி அமைப்பின் கீழ், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் பெறுமதிக்கும் ஆபரண தயாரிப்பு வேலைக்கூலிக்கும் […]

News, Uncategorized

இன்றைய வானிலை: பல பகுதிகளில் மழை; கடற்பரப்பில் பலத்த காற்று எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பும் காணப்படுகிறது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில்

Local News, News

வயல்வெளியில் இளைஞர் சடலமாக மீட்பு; அஹங்கம பகுதியில் பரபரப்பு

அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுமுல்லவத்த, தித்தகல்ல பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நேற்று (08) மாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள், குறித்த இளைஞரின் சடலத்தை மீட்டுள்ளனர். உயிரிழந்தவர் தித்தகல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, அவர் தனது வயலில் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம்

Astrology, News

இன்றைய ராசி பலன் 8 ஜூன் 2026

இன்று ஜூன் 08, 2026 திங்கட் கிழமை, பராபவ வருடம், வைகாசி மாதம் 25ம் தேதி கும்பம், மீனம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். சந்திர பகவானின் அருள் அதிகமாக கிடைக்கக்கூடிய நாள். இன்று கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி. இன்று சிம்ம ராசியில் உள்ள மகம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஜூன் 8, 2026 வைகாசி மாதம் 25ம் தேதி திங்கட் கிழமை, கும்பம், மீனம் ராசியில் பூரட்டாதி

News, World News

இஸ்ரேலில் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, ஐவர் காயம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை எல்லைக்கு அண்மையில் உள்ள இஸ்ரேலின் பல பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிற்றூந்தில் பயணித்த நபர் ஒருவரால் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதுடன், உயிரிழந்தவர் 35 வயதுடைய பொதுமகன் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். மேற்குக்கரையின் கல்கிலியா நகருக்கு அருகிலுள்ள கொச்சாவ் யாயிர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து தப்பிச் சென்ற

News, World News

ஜே.டி. வான்ஸின் கருத்து உண்மைக்கு புறம்பானது; பிரித்தானியா கடும் மறுப்பு

பிரித்தானிய மாணவர் ஹென்றி நோவக் கொலைச் சம்பவத்தை குடியேற்றவாசிகளுடன் தொடர்புபடுத்தி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வெளியிட்ட கருத்து முற்றிலும் தவறானது என பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லேமி தெரிவித்துள்ளார். தொலைபேசி உரையாடல் ஒன்றின் போது ஜே.டி. வான்ஸிடம் இதுகுறித்து விளக்கமளித்த டேவிட் லேமி, கடந்த ஆண்டு 18 வயதான ஹென்றி நோவக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த பிரித்தானிய பிரஜையான விக்ரம் திக்வா என்பதையும், அந்தக்

Local News, News

2029இலும் அநுர குமாரவே ஜனாதிபதி; மக்கள் ஆணை மேலும் பலப்படும் – வசந்த சமரசிங்க

2029ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி பதவியை அநுர குமார திஸாநாயக்கவே மீண்டும் வகிப்பார் என அமைச்சர் வசந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ரோமேஷ் தரங்க வீசும் ஈட்டியைப் போலவே, தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் இலக்கும் துல்லியமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மக்களின் நம்பிக்கையையும் வலுவான ஆணையையும் பெற்ற அரசாங்கமாக தற்போதைய நிர்வாகம் செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அரசாங்கம் விரைவில் வீழ்ச்சியடையும் என சில தரப்பினர் எதிர்பார்த்து வருவதாகவும் கூறினார். உலகளாவிய பொருளாதார

Local News, News

போதையில் வாகனம் ஓட்டி இரு உயிர்களை காவுகொண்ட சாரதி சிக்கினார்!

ஹங்வெல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட எம்புல்கம – பனாகொட வீதியில் இடம்பெற்ற சோகமான வீதி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 6ஆம் திகதி மாலை, எம்புல்கம நோக்கிப் பயணித்த சிற்றூந்து ஒன்று, அதே திசையில் வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது மோதியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்துக்குப் பின்னர் குறித்த வாகனம் சம்பவ இடத்தில் நிறுத்தப்படாமல் தப்பிச் சென்றதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இரு பெண்களும் உடனடியாக நவகமுவ மருத்துவமனைக்கு கொண்டு

Uncategorized

“முடிவெடுக்கும் அதிகாரம் என்னிடமே” – நெதன்யாகுவை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்

ஈரானுடன் அமெரிக்கா மேற்கொள்ளவுள்ள எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தையும் இஸ்ரேல் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும், அதுகுறித்த இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், “முக்கிய முடிவுகளை எடுப்பது நான்தான்; நெதன்யாகு அல்ல. எனவே, அமெரிக்கா எட்டும் ஒப்பந்தத்தை அவர் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” எனக் கூறியுள்ளார். அதேவேளை, ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேலை

Local News, News

பெரும்போக நெற்செய்கையில் ட்ரோன் தொழில்நுட்பம்: உள்நாட்டு மென்பொருளுடன் புதிய முன்னேற்றம்!

உலர் வலயப் பகுதிகளில் வரவிருக்கும் பெரும்போக நெற்செய்கை நடவடிக்கைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நெல் விதைப்பு, உர விநியோகம் உள்ளிட்ட முக்கிய விவசாயப் பணிகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் திறம்பட மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் குருகுலவ பகுதியில் அண்மையில் நடைபெற்ற விசேட பயிலரங்கில் இந்தத் திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. பயிலரங்கின் போது, முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கட்டுப்பாட்டு மென்பொருள் மற்றும்

Scroll to Top