
அமெரிக்காவில் கடும் வெப்ப அலை: சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பாதிப்பு, மின்சாரத் தேவை உச்சம்
அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அந்நாட்டின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளன. வொஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறவிருந்த நூற்றுக்கணக்கான அணிவகுப்புகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கை நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சில நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஏற்பாட்டில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த Great American State Fair கண்காட்சியும், 38 பாகை செல்சியஸை எட்டிய வெப்பநிலை காரணமாக தற்காலிகமாக […]









