ஜப்பான் எடுத்த அதிரடி முடிவால் ஏற்றுமதி பாதிப்பு

1986ஆம் ஆண்டு பழ ஈக்கள் அச்சுறுத்தலை காரணமாகக் கொண்டு இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை விதித்திருந்தது. பின்னர் 2006ஆம் ஆண்டு அந்தத் தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய மாம்பழங்கள் ஜப்பானுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யத் தொடங்கின.
இந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய மாம்பழ இறக்குமதிக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவின் முக்கிய மாம்பழ ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் உத்தரப் பிரதேசம் Rahmanpur பகுதியில் உள்ள பதப்படுத்தும் ஆலையில் ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாம்பழங்களை கிருமி நீக்கம் செய்ய பயன்படுத்தப்படும் புகைமூட்டும் (VHT) செயல்முறையில் சில குறைபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து Japan-இன் யோகோஹாமா தாவரப் பாதுகாப்பு அமைப்பு இந்திய மாம்பழ இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. மீண்டும் ஏற்றுமதி தொடங்குவதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்தத் தடை நீடிக்கும் வரை, இந்தியாவின் பிரபலமான அல்போன்சோ, கேசர், லங்க்ரா மற்றும் பங்கனபள்ளி போன்ற மாம்பழ வகைகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆலையகங்களில் செயல்பாட்டு தரம் ஜப்பானின் தரநிலைகளுக்கு ஏற்ப மேம்படும்வரை இறக்குமதி இடைநிறுத்தம் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
