January 2026

Uncategorized

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு…!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றமான பாதுகாப்புச் சூழல் குறித்துத் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.

Uncategorized

இலங்கைக்கு மீண்டும் பெய்லி பாலங்களை அனுப்பியது இந்தியா

இலங்கை டித்வா, புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் புனரமைப்பு பணிகளுக்காக மற்றுமொரு தொகுதி பெய்லி பாலங்களை இலங்கைக்கு, இந்தியா இன்று (ஜனவரி 31) அனுப்பியது. டித்வா புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தினால் இலங்கையின் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாலங்கள் சேதமடைந்தன. துண்டிக்கப்பட்ட போக்குவரத்தை விரைவாகச் சீரமைக்க இந்தப் பாலங்கள் உதவும். தற்காலிக இரும்புப் பாலங்கள்  இது குறித்து இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் புனரமைப்புப் பணிகளுக்காக 10

Uncategorized

திருகோணமலை முல்லைத்தீவு இடையில் கடலில் நிலநடுக்கம்

திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலான கடலில் இன்று (31) பிற்பகல் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Uncategorized

உலக சந்தையில் தங்க விலையில் சடுதியான வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய (31.01.2026) நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது நேற்றைய தினத்துடன் (30) ஒப்பிடுகையில் 434.45 அமெரிக்க டொலர் வீழ்ச்சி எனவும் சதவீத அடிப்படையில் 8.15 வீத வீழ்ச்சி எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Uncategorized

அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டப்போகும் மழை

அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் மழை மேலும், வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில். 50 மி.மீட்டருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும்.

Uncategorized

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ; காத்திருக்கும் கனமழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Uncategorized

யாழ்–பளை வீதியில் பயங்கர விபத்து ; ஸ்தலத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்

கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பளை நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த குமாரசாமி செல்வவதி என்கின்ற 63 வயதுடைய பெண்ணே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.

Uncategorized

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்

இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒத்திகைகளை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. 78 ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Uncategorized

தேசிய கலை இலக்கியப் பெருவிழாவில் யாழ். மாவட்டத்துக்கு 14 விருதுகள்

கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய தேசிய மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 14 விருதுகள் கிடைத்துள்ளன. கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டு தோறும் நடத்தும் கலை இலக்கியப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

Scroll to Top