மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதுடன், இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

சந்தை தகவல்களின் அடிப்படையில், WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 96.60 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
அதேவேளை, உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.05 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், இயற்கை எரிவாயு (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 2.907 அமெரிக்க டொலராக குறைந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
