News

Local News, News

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு மனு: ஜூலை 23ஆம் தேதி நீதிமன்றத் தீர்மானம்

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் ஜூலை 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்பும் சட்ட மா அதிபர் தரப்பும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த நீதிமன்றம், மனுவை முழுமையான விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான […]

Local News, News

நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவுக்கு பசுமை எரிசக்தி மேம்பாட்டு திட்டம்– அரசின் புதிய நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் உள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகியவற்றை ‘பசுமை சக்தித் தீவுகள்’ (Green Energy Islands) ஆக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். தற்போது இந்த மூன்று தீவுகளிலும் நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy System – HRES) திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, பசுமை எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை விரிவுபடுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. எரிசக்தி அமைச்சின்

Local News, News

டெங்கு அதிகரிப்பு எதிரொலி; தாதியர்களின் சேவைக் காலம் நீட்டிக்க கோரிக்கை

நாட்டில் நிலவி வரும் கடுமையான தாதியர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், ஓய்வு பெறவுள்ள தாதியர்களின் சேவைக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நேற்று (14) ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாகவும், வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும் கணக்கில்

Local News, News

புகையிலை கலந்த வெற்றிலை விற்பனைக்கு கடும் நடவடிக்கை; நாடளாவிய கண்காணிப்பு தீவிரம்

இலங்கையில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், புகையிலை கலந்த வெற்றிலையின் விற்பனையை முற்றாகத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பதிவாகும் புற்றுநோய்களில் வாய் புற்றுநோய் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதால், அதனைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத் தெரிவித்துள்ளார். புகையிலை கலந்த வெற்றிலையை பயன்படுத்துவது வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக

News, World News

அமெரிக்காவில் கடிகார நேர மாற்றத்துக்கு முற்றுப்புள்ளியா? முக்கிய சட்டமூலம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்

அமெரிக்காவில் ஆண்டுதோறும் இருமுறை கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறையை நிறுத்தி, பகல்நேர சேமிப்பு நேரத்தை (Daylight Saving Time) ஆண்டு முழுவதும் அமல்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட முக்கிய சட்டமூலம் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 308 உறுப்பினர்களும், எதிராக 117 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமூலம், அடுத்தகட்டமாக செனட் சபையின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. செனட் சபையிலும் அங்கீகாரம் கிடைத்தால், ஆண்டுதோறும் நவம்பர்

News, World News

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு; இலங்கையிலும் அதிகரிக்க வாய்ப்பு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, இன்று (15) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் உயர்வு பதிவாகியுள்ளது. இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,048.64 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளி 58.65 அமெரிக்க டொலருக்கு வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை

News, Uncategorized

இன்று லேசான மழை எதிர்பார்ப்பு; பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்

நாட்டின் சில பகுதிகளில் இன்று (15) லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மேலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை,

Astrology, News

இன்றைய ராசி பலன் 14 ஜூலை 2026

இன்று 14 ஜூலை 2026 செவ்வாய்க்கிழமை பராபவ வருடம், ஆனி மாதம் 30ம் தேதி மிதுன ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று முன்னோர் வழிபாடு செய்ய வேண்டிய நாள். இன்று மிதுனத்தில் சூரியன், சந்திரன், புதன் ஆகிய மூன்று கிரக சேர்க்கை நடக்கிறது. கடகத்தில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இன்று திரிகிரகி யோகம். இன்று விருச்சிக ராசியில் உள்ள அனுஷம், கேட்டை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று

News, Uncategorized

அநுராதபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து: மரத்தில் மோதி ஆசிரியர் உயிரிழப்பு

அநுராதபுரம் மாவட்டத்தின் இபலோகம, கலாவெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இபலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலாவெவ – புளியங்குளம் வீதியின் பிம்பார பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் முதலில் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அநுராதபுரம் கலாவெவ பகுதியைச் சேர்ந்த

Local News, News

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 12 இலட்சத்தைத் தாண்டினர்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை (1.2 மில்லியன்) கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் ஜூலை 12 வரை நாட்டிற்கு மொத்தம் 1,217,956 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூலை 1 முதல் 12 ஆம் திகதி வரையிலான 12 நாட்களில் மட்டும் 71,383 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

Scroll to Top