சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு; இலங்கையிலும் அதிகரிக்க வாய்ப்பு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, இன்று (15) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் உயர்வு பதிவாகியுள்ளது.

இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,048.64 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளி 58.65 அமெரிக்க டொலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வின் தாக்கம் இலங்கை சந்தையிலும் பிரதிபலிக்கக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு மற்றும் சர்வதேச அரசியல், பொருளாதார சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top