
எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் ஜூலை 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்பும் சட்ட மா அதிபர் தரப்பும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த நீதிமன்றம், மனுவை முழுமையான விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்த தனது தீர்மானத்தை ஜூலை 23ஆம் தேதி அறிவிப்பதாக உத்தரவிட்டது.
