News

Local News, News

புத்தாண்டு காலத்தில் மதுபான விற்பனைக்கு தற்காலிக கட்டுப்பாடு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி ஆணையாளருமான ஏ.ஏ. ரொஷான் பெரேரா வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் அனுமதியுடன் அமுல்படுத்தப்படும் இந்த உத்தரவின் அடிப்படையில், மதுபான விற்பனைக்கு உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களும் குறித்த இரண்டு நாட்களிலும் செயல்படக்கூடாது. இதில் வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையங்கள், பார்கள், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களில் […]

News, Sports News

இறுதி வரை போராடிய டெல்லி!9 ஆண்டுகளில் முதல் அரை சதத்தை பதிவு செய்த தமிழக வீரர்

2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் 14ஆவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. குஜராத் அணி அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டகாரர் வீரர் சாய் சுதர்சன் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய அணித்தலைவர் சுப்மன் கில் அரைசதம் கடந்தார்.

News, Sports News

யாழ் வீரர்கள் வரலாறு படைத்தனர் – தேசிய உதைப்பந்தாட்டத்தில் புதிய சாம்பியன்!

இலங்கை உதைப்பந்தாட்ட வரலாற்றில் முக்கியமான ஒரு மைல்கல்லை உருவாக்கி, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த யாழ் நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் தேசிய மட்டத்தில் “சாம்பியன்ஸ் கிண்ண” பட்டத்தை வென்றுள்ளது. பரபரப்பான இறுதிப்போட்டி – கடைசியில் பெனால்டியில் தீர்ப்பு இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய நொக்-அவுட் தொடரின் இறுதிப்போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய சக்திவாய்ந்த சோண்டர்ஸ் கழகத்துடன் சென். மேரிஸ் கழகம் மோதியது. போட்டி தொடங்கிய 3ஆவது நிமிடத்திலேயே டஞ்சுமா கம்பாரி

Astrology, News

இன்றைய ராசி பலன் 10 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 10, 2026 பங்குனி மாதம் 27ம் தேதி வெள்ளிக் கிழமை, மகர ராசியில் பூராடம் பின்பு உத்திரம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மீன ராசியில் ஆதித்ய தித்ய யோகம், உருவாகிறது. சூரியனுக்கு 2ம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் வேசி யோகம் உருவாகிறது. இன்று ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஏப்ரல் 10, 2026 வெள்ளிக் கிழமை, பங்குனி மாதம் 27ம் தேதி, மகர

Health & Beauty Tips, News

எடை குறைவா? இதை சாப்பிட்டால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும்!

வாழ்க்கை முறை மாறி வருவதாலும் அதிக கலோரி கொண்ட உணவுகளாலும் உடல் எடை அதிகரிப்பதாக இன்று பலரும் கூறி வருகின்றனர். உடல் எடையைக் குறைப்பது எப்படி என்பதுதான் இன்று அதிகமாகக் கேட்கப்படும் கேள்வியாகவும் உள்ளது. பலரும் உடல் எடையை குறைப்பதற்குப் பல வழிமுறைகள் சொல்கின்றனர். இதற்கான யோசனைகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், இதே நேரம் உடல் எடை குறைவாக உள்ளவர்கள், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை எப்படிக் கூட்டுவது என்பதற்கான வழிகளையும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பார்க்கப்போனால்,

Local News, News, World News

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (09.04.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.62 ஆகவும் விற்பனைப் பெறுமதி 319.08 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416.02 ஆகவும் விற்பனைப் பெறுமதி 428.86 ஆகவும் பதிவாகியுள்ளது. நாணயமாற்று விகிதம் யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362.12 ஆகவும் விற்பனைப் பெறுமதி 373.70 ஆகவும் பதிவாகியுள்ளது. கனேடிய

News, Uncategorized

பாடசாலை விழாக்கள் எளிமைப்படுத்தல் – கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டுதல்

பாடசாலைகளில் நடைபெறும் விழாக்கள் மற்றும் நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது, செலவுகளை குறைந்த அளவில் வைத்திருக்க வேண்டும் என கல்வி அமைச்சு அனைத்து அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. பாடசாலை நிகழ்வுகளுக்காக பெற்றோர்களிடமிருந்து அதிகமாக பணம் வசூலிக்கும் நடைமுறையைத் தவிர்க்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அனைத்து நிகழ்வுகளும் எளிமையானதும் குறைந்த செலவிலானதுமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை புறக்கணித்து, சில பாடசாலைகள் இன்னும் ஆடம்பரமாக விழாக்களை நடத்தி அதிக நிதி செலவிடுகின்றன என

Local News, News

இ.போ.சபைக்கு தினசரி ரூ.20 மில்லியன் இழப்பு – அமைச்சர் கடும் நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெறும் மோசடி செயல்பாடுகள் காரணமாக, தினமும் சுமார் ரூபாய் 20 மில்லியன் வரை நட்டம் ஏற்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த இழப்பு பொதுமக்களின் பணத்தில் ஏற்படும் பெரிய வீணாக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பேருந்து சேவைகள் மட்டுமன்றி, சபையின் நிர்வாக மற்றும் மனிதவள அமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார். இலங்கை போக்குவரத்து சபையை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என அமைச்சர் தெளிவுபடுத்தினார். அதை

News

அஸ்வெசும கொடுப்பனவு வழங்கல் இன்று தொடக்கம் – முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மாதாந்திர கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செயலகத்தின் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் தெரிவித்ததாவது, பயனாளிகள் எந்த சிரமமுமின்றி தங்களுக்குரிய கொடுப்பனவுகளைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் வசிப்பிடப் பகுதிகளுக்குட்பட்ட அஞ்சல் நிலையங்களுக்கு சென்று இந்த நிதியைப் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவு வழங்கல் இன்று தொடங்கி ஏப்ரல் 11ஆம்

Local News, News

தொழிலாளர்களுக்கான சமையல் எரிவாயு வழங்கல் இரட்டிப்பு

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ கிராம் LPG சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வழங்கலை இரட்டிப்பாக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது. மக்கள் அடர்த்தி அதிகமான நகரங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமையல் சிக்கல்களைத் தணிப்பதுடன், அவர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய நிலையைத் தவிர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். 2026 மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பதிவான தினசரி சராசரி விநியோக அளவுகளை

Scroll to Top