பாடசாலைகளில் நடைபெறும் விழாக்கள் மற்றும் நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது, செலவுகளை குறைந்த அளவில் வைத்திருக்க வேண்டும் என கல்வி அமைச்சு அனைத்து அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

பாடசாலை நிகழ்வுகளுக்காக பெற்றோர்களிடமிருந்து அதிகமாக பணம் வசூலிக்கும் நடைமுறையைத் தவிர்க்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அனைத்து நிகழ்வுகளும் எளிமையானதும் குறைந்த செலவிலானதுமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை புறக்கணித்து, சில பாடசாலைகள் இன்னும் ஆடம்பரமாக விழாக்களை நடத்தி அதிக நிதி செலவிடுகின்றன என அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலை நிதி முகாமைத்துவத்திற்கான 54/2023 இலக்க சுற்றுநிருபம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து நிதி விதிமுறைகளையும் அதிபர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது.
