
ஒரே மாதத்தில் ரூ.427 அதிகரிப்பு; கொழும்பில் அதிகபட்சம், மொனராகலையில் குறைந்தபட்சம்
இலங்கையில் ஒரு நபர் தனது அன்றாட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மாதமொன்றுக்கு குறைந்தபட்சமாக 17,117 ரூபா செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள 2026 ஏப்ரல் மாத உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு அறிக்கையின்படி, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் வறுமைக் கோட்டின் மதிப்பு 427 ரூபாவால் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நபருக்கான குறைந்தபட்ச வாழ்வாதாரச் செலவு 16,690 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில், ஏப்ரல் […]









