
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க உயர்வை பதிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,539.76 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், வெள்ளியின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.29 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.
உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவை ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
