May 2026

Local News, News

WhatsApp வழி புதிய காணொளி மோசடி: SL CERT அவசர எச்சரிக்கை

இலங்கையர்களை இலக்கு வைத்து நடைபெற்று வரும் புதிய வகை WhatsApp காணொளி மோசடி குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SL CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடி இந்தியாவில் இருந்து இயக்கப்படுவதாக சந்தேகிக்கப்படுவதுடன், அண்மைக் காலங்களில் இதுகுறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் கவர்ச்சிகரமான இளம் பெண்களின் போலி Facebook கணக்குகள் மூலம் முதலில் தொடர்பு கொண்டு, பின்னர் உரையாடலை WhatsApp செயலிக்கு மாற்றுகின்றனர். அதன் பின், அவர்கள் காணொளி அழைப்புகளை ஏற்படுத்துகின்றனர். […]

Local News, News

ஜூலை 1க்கு முன் அனைத்து முன்பள்ளிகளும் பதிவு கட்டாயம்

நாட்டிலுள்ள அனைத்து சிறுவர் முன்பள்ளிகளும் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதிக்குள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் புதிய முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கு முன்பே அவற்றை பதிவு செய்திருப்பது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்பள்ளி கல்வி அமைச்சின் பாடத்திட்டத்தின்படி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் குறித்து மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Astrology, News

இன்றைய ராசி பலன் 5 மே 2026

இன்று மே 5, 2026 செவ்வாய் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 22ம் தேதி, விருச்சிகம், தனுசு ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். அங்காரகனின் அருள் நிறையக்கூடிய நாள். இன்று மேஷ, ரிஷப ராசியில் உள்ள பரணி, கார்த்திகை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சங்கடஹர சதுர்த்தி. இன்று மே 5, 2026 சித்திரை மாதம் 22ம் தேதி செவ்வாய் கிழமை, விருச்சிகம், தனுசு ராசியில் கேட்டை, மூலம்

Astrology, News

இன்றைய ராசி பலன் 4 மே 2026

இன்று மே 4, 2026 சித்திரை மாதம் 21ம் தேதி திங்கட் கிழமை, விருச்சிக ராசியில் அனுஷ, கேட்டை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சந்திரன் நீசம் அடையக்கூடிய நாள். இன்று மேஷ, ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம். இன்று மே 4, 2026 திங்கட் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 21ம் தேதி, விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார்.

News, World News

தொழில்நுட்ப முன்னேற்றம் காரணம் அல்ல: ஊழியர் பாதுகாப்பில் சீன தீர்ப்பு

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை காரணமாகக் காட்டி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடியாது என சீன நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனம், AI பயன்பாட்டால் பணிகள் குறைந்ததாகக் கூறி தரக் கட்டுப்பாட்டு பணியாளர் ஒருவர் மீது ஊதியக் குறைப்பை மேற்கொள்ள முயன்றுள்ளது. அந்த பணியாளர் அதை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, தொழில்நுட்ப முன்னேற்றத்தை காரணமாகக் காட்டி அவரை பணிநீக்கம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர்

News, World News

சர்வதேச சந்தையில் தங்க விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,615.3 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேபோல், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.82 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

Local News, News

வடக்கில் ஆசிரியர் இடமாற்றம் குறித்து அதிருப்தி

2026 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தில் இதுவரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. டினோசன் கருத்து தெரிவிக்கையில், ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் அதிகாரிகள் முன்வைக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை விளக்கமாக எடுத்துரைத்தார். ஆசிரியர் இடமாற்றம் தாமதமாகும் நிலையில், அதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுவதாகவும் அவர்

Local News, News

அத்துருகிரியவில் விபத்து: பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு

அத்துருகிரிய – கொட்டாவ வீதியில் அமைந்துள்ள பழைய சந்திப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில், உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து மதிலில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாகச் சென்ற உந்துருளி திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள், மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்து வந்த 20 வயதுடைய மாணவரும், ஹோமாகம பகுதியில் உள்ள வாகனத் திருத்தகத்தில் பணிபுரிந்த இளைஞரும் ஆவர். அதிகாலை 2 மணியளவில், அத்துருகிரிய நோக்கி

Local News, News

புதிய VAT வரிக் கொள்கைக்கு சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்

அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ள புதிய பெறுமதிசேர்வரி (VAT) மாற்றங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஜூலை 1ஆம் தேதி முதல் வரி வலையை விரிவுபடுத்துதல், வரி விகிதங்களை உயர்த்துதல் மற்றும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். புதிய வரி மாற்றங்களின் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (SMEs) வரிச் சட்டகத்திற்குள் கொண்டு வரப்படவுள்ளதாகவும், நிதிச் சேவைகள் அதிக வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும்,

Local News, News

தங்க விலை நிலைமை மாற்றமின்றி தொடர்கிறது

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, இன்றைய தினம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,075 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

Scroll to Top