
2026 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தில் இதுவரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. டினோசன் கருத்து தெரிவிக்கையில், ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் அதிகாரிகள் முன்வைக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை விளக்கமாக எடுத்துரைத்தார். ஆசிரியர் இடமாற்றம் தாமதமாகும் நிலையில், அதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
