
நாட்டிலுள்ள அனைத்து சிறுவர் முன்பள்ளிகளும் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதிக்குள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் புதிய முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கு முன்பே அவற்றை பதிவு செய்திருப்பது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்பள்ளி கல்வி அமைச்சின் பாடத்திட்டத்தின்படி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் குறித்து மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
