Search Results for: 3

Here are the search results for your search.

News, World News

சர்வதேச சந்தையில் தங்கம் உயர்வு; வெள்ளி விலையில் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க உயர்வை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,539.76 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், வெள்ளியின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.29 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவை ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

News, Sports News

தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் IPL கிண்ணத்தை வென்ற RCB

19வது இந்தியன் பிரிமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்த அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது. நேற்று (31) நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ்

News, World News

அமெரிக்க–ஈரான் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் கோரிய டிரம்ப்?

இவ்வருடத்தின் தொடக்கத்தில் வெடித்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள அமெரிக்க–ஈரான் ஒப்பந்தத்தில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை மற்றும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்புகளை அகற்றுவது தொடர்பான அம்சங்களிலேயே இந்த மாற்றங்கள் கோரப்பட்டுள்ளதாக சிபிஎஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. எனினும், இந்த தகவல்கள் குறித்து வெள்ளை மாளிகை இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்நிலையில், ஈரானின்

News, World News

ஆப்கானிஸ்தானில் கோர விபத்து: அகதிகள் சென்ற லொறி கவிழ்ந்து 18 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பாரிய சாலை விபத்தில் 10 குழந்தைகள் மற்றும் 5 பெண்கள் உட்பட மொத்தம் 18 ஆப்கானிய அகதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜலாலாபாத் நகரத்தையும் தலைநகர் காபூலையும் இணைக்கும் லக்மேன் மாகாண நெடுஞ்சாலையில் நேற்று (30) இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானில் தங்கியிருந்த ஆப்கானிய அகதிகள் தாயகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த லொறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்ததாக லக்மேன் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மாலிக்

Local News, News

இன்று வானில் அரிய ‘நீல நிலவு’ தோற்றம்; பொதுமக்களுக்கு பார்வையிட வாய்ப்பு

பல ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றவுள்ள ‘நீல நிலவு’ (Blue Moon) எனப்படும் அரிய வானியல் நிகழ்வை இன்று (31) இரவு பொதுமக்கள் பார்வையிட முடியும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நிகழ்வு பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது சில சந்தர்ப்பங்களில் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய அரிய வானியல் சம்பவமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நீல நிலவு’ என்ற பெயர் இருந்தாலும், சந்திரன்

Local News, News

செப்டம்பருடன் தற்காலிக நிவாரணங்கள் நிறுத்தம்; IMF-க்கு ஜனாதிபதி அநுர உறுதி

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கும் நிதி 100 பில்லியன் ரூபாவிற்குள் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துக்கு (IMF) உறுதியளித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், தற்போது வழங்கப்படும் அனைத்து தற்காலிக நிவாரணங்களும் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் படிப்படியாக நிறுத்தப்படும் என்றும், நாட்டின் நிதி

Local News, News

இன்று நள்ளிரவு முதல் அமுல்: அனைத்து முக்கிய எரிபொருட்களின் விலையும் உயர்வு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை லிட்டருக்கு 407 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், லங்கா சுப்பர் டீசலின் விலை 20 ரூபாயால் உயர்த்தப்பட்டு, லிட்டரொன்றின் புதிய விலை 478 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அது லிட்டருக்கு 434 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.

Local News, News

நீதிமன்ற அனுமதியுடன் கைதி ஜெயக்குமாரின் உடல் அரச செலவில் அடக்கம்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றுள்ளன. யாழ்ப்பாணம் கோம்பையன் இந்து மயானத்தில் அவரது உடல் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி எஸ். பிரணவன் உறுதிப்படுத்தியுள்ளார். வித்யா படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் உறுதி செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து தீர்ப்பை அறிவிப்பதற்காக மரண தண்டனை கைதிகள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து

Cinema, News

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்

தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மரணமடைந்த போது அவருக்கு 85 வயதாகியிருந்தது. மோகினி மணியின் மறைவுச் செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அஜித்குமார் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவித்து

Local News, News

காணாமல் போன 4 கடற்றொழிலாளர்களை தேடும் பணிகள் தீவிரம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்று காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விடயத்தை கடற்படை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 27 ஆம் திகதி இரவு சுமார் 11 மணியளவில் இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற குறித்த கடற்றொழிலாளர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களை கண்டறியும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடற்றொழிலாளர்கள் பயணித்திருக்கக்கூடிய திசைகள் தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தேடுதல்

Scroll to Top