
போலி இணைய விளம்பரங்கள் மூலம் பண மோசடி: பொதுமக்களுக்கு CERT அவசர எச்சரிக்கை
இலங்கையில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மட்டும் 360-க்கும் அதிகமான இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைப்பிரிவு (SLCERT) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அப்பிரிவின் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல, பொதுமக்களை ஏமாற்றுவதற்காக மோசடிக்காரர்கள் தற்போது புதிய மற்றும் நுட்பமான தந்திரோபாயங்களை பயன்படுத்தி வருவதாக எச்சரித்தார். உலகளாவிய மற்றும் உள்நாட்டில் பிரபலமான வர்த்தக நிறுவனங்களின் பெயர்கள், இலச்சினைகள் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் […]








