Search Results for: 3

Here are the search results for your search.

News, World News

அமெரிக்காவில் கடும் வெப்ப அலை: சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பாதிப்பு, மின்சாரத் தேவை உச்சம்

அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அந்நாட்டின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளன. வொஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறவிருந்த நூற்றுக்கணக்கான அணிவகுப்புகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கை நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சில நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஏற்பாட்டில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த Great American State Fair கண்காட்சியும், 38 பாகை செல்சியஸை எட்டிய வெப்பநிலை காரணமாக தற்காலிகமாக […]

News, World News

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் உயர்வு

சர்வதேச சந்தையில் இன்று (05) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்வடைந்துள்ளது. இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,175.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 62.39 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News, World News

சமூக வலைத்தளங்கள் மூலம் விமானப் பணியாளர்களை குறிவைக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள்

தாய்லாந்தில் இருந்து அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக, சர்வதேச கடத்தல் கும்பல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் விமானப் பணியாளர்களை குறிவைத்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானப் பணிப்பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கடத்தல் வலையமைப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயினின் சர்வதேச சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளில், வெறும் 8,800 தாய்

News, World News

அமெரிக்க காவல்துறைக்கு எதிராக எகிப்து கால்பந்து அணி புகார்

கால்பந்து செம்பியன்ஷிப் 2026 தொடரில் பங்கேற்று வரும் எகிப்து தேசிய அணியின் பணிப்பாளர் இப்ராஹிம் ஹசன் மற்றும் வீரர் ட்ரெசெகுவெட் ஆகியோரை டல்லாஸ் காவல்துறை அதிகாரி ஒருவர் தள்ளிவிட்டதாக எகிப்து அணி நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது. கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் தொடரின் போது, டல்லாஸில் அமைந்துள்ள அணியின் தங்கும் விடுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரசிகர் ஒருவருடன் புகைப்படம் எடுக்க முயன்றபோது இந்தச் சம்பவம் ஏற்பட்டதாக

Local News, News

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் விநியோகத்தடை

மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மற்றும் தெஹிவளை, மாளிகாவத்தை லைட்ஹவுஸ் நீர் உந்து நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, இன்று (04) கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று முற்பகல் 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும். இதன்படி,

Local News, News

ஜூலை 7 முதல் 10 வரை நாடாளுமன்ற அமர்வுகள்: முக்கிய சட்டமூலங்கள் மற்றும் பிரேரணைகள் விவாதத்திற்கு

வரும் ஜூலை 7ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. அமர்வுகளின் போது, புதன்கிழமையைத் தவிர்ந்த ஏனைய நாட்களில் முற்பகல் 10.00 மணி முதல் 11.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் மற்றும் நிலையியற் கட்டளை வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று பிரதமரிடம் கேள்வி எழுப்புவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தொல்பொருட்கள் கட்டளைச்சட்டம் மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான விதிகள் குறித்து விவாதம்

News, Uncategorized

இன்றைய வானிலை அறிவிப்பு: பல பகுதிகளில் கனமழை; கடல் பகுதிகளுக்கு எச்சரிக்கை

நிலப்பரப்பு:கமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகும் வாய்ப்புள்ளது. அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40–50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று அடிக்கடி வீசக்கூடும். கடல் பிராந்தியங்கள்:கல்பிட்டியிலிருந்து

Local News, News

நள்ளிரவு குடும்பத் தகராறு: தாக்குதலில் 29 வயது இளம் பெண் உயிரிழப்பு

பொலன்னறுவை மாவட்டத்தின் அரலகன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிம்பொக்குன பகுதியில் குடும்பத் தகராறு வன்முறையாக மாறியதில், 29 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு (03) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கணவர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் பெண் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் அரலகன்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அரலகன்வில, பிம்பொக்குன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சந்தேகநபரான

Local News, News

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்: கோரிக்கை கடிதம் கையளிப்பு

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, ஈழத் தமிழர் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து எழுத்துமூல கோரிக்கை கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை நீக்கி தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத் தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை

News, World News

இந்தியா–ஜப்பான் உறவு புதிய கட்டத்திற்கு: மோடியின் நெகிழ்ச்சியான வரவேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை “என் தங்கை” என அன்புடன் குறிப்பிட்டு வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணத்தின் போது, சுமார் ₹35,000 கோடி முதலீட்டில் ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுந்து உற்பத்தி ஆலையை இரு தலைவர்களும் இணைந்து திறந்து வைத்தனர். இதனையடுத்து, புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா–ஜப்பான் 16ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டில் இரு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த உச்சிமாநாட்டில் பொருளாதாரப் பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, முக்கிய

Scroll to Top