இன்றைய வானிலை அறிவிப்பு: பல பகுதிகளில் கனமழை; கடல் பகுதிகளுக்கு எச்சரிக்கை

நிலப்பரப்பு:
கமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகும் வாய்ப்புள்ளது.

அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40–50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று அடிக்கடி வீசக்கூடும்.

கடல் பிராந்தியங்கள்:
கல்பிட்டியிலிருந்து கொழும்பு வழியாக காலி வரையிலான கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பகுதிகளில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30–40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

முல்லைத்தீவிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையும் கடல் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 55–65 கிலோமீற்றர் அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் காற்று அடிக்கடி பலமாக வீசக்கூடும். இதனால் இக்கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழ்ந்துள்ள ஏனைய கடல் பகுதிகளிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும். அத்தகைய சந்தர்ப்பங்களில் கடல் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்.

மேலும், சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் கடலலைகள் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top